2022/2023 திறமையாளர்கள் பாராட்டு

கண்டி - ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Jan 29, 2024, 10:14:29 AM

கண்டி கல்வி வலயத்திற்குட்பட்ட தெல்தோட்டை மூஸ்லிம் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே கலந்து கொண்டார். விசேட அதிதயாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சமரி அந்தரகே கலந்து கொண்டார்.
கல்லூரி அதிபர் பைசால் மொகமட் தலைமையில் இடம் பெற்ற மேற்படி பரிசளிப்பு வைபவத்தில் 2022 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாடசாலை 1963ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். அதிதிகள் மாணவர்களுக்கு பரிசு வழங்குவதையும், பிரதம அதிதி மரக்கன்று ஒன்றை நடுவதையும் படத்தில் காணலாம்.

VIDEOS

RELATED NEWS

Recommended