• முகப்பு
  • இலங்கை
  • நோன்பாளிகளுக்கு பள்ளிவாசல்களினூடாக வழங்கப்படும் கஞ்சிக்கான அரிசி மற்றும் பேரீச்சம் பழம் போன்றன வழங்கி வைப்பு

நோன்பாளிகளுக்கு பள்ளிவாசல்களினூடாக வழங்கப்படும் கஞ்சிக்கான அரிசி மற்றும் பேரீச்சம் பழம் போன்றன வழங்கி வைப்பு

புத்தளம் எம். யூ. எம். சனூன்

UPDATED: Mar 23, 2024, 9:05:17 AM

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மூலம் வழமை போன்று இம்முறையும் ரமழான் காலத்தில் நோன்பாளிகளுக்கு பள்ளிவாசல்களினூடாக வழங்கப்படும் கஞ்சிக்கான அரிசி மற்றும் பேரீச்சம் பழம் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.

பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத புத்தளம் மாவட்டத்தில் உள்ள சுமார் 400 பள்ளிவாசல்களுக்கான 50 கிலோ விகிதம் அரிசி வழங்கப்படுகின்றது.

Also Read :வட கொழும்பில் ஜனனம் அறக்கட்டளையின் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இப்தார் நிகழ்வு

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், துபாய் நாட்டு பிரதிநிதி ஒருவரால் வழங்கிவைக்கப்பட்ட பேரீச்சம் பழங்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் உஸ்தாத் மார்களுக்கும் மாவட்ட மட்டத்தில் வழங்கி வைக்கப்படுகின்றது.

கல்பிட்டி சின்னக்குடியிருப்பு பிரதேச இணைப்பாளர் யூ.எம். ஜின்னா ஏற்பாட்டில், பாராளுமன்ற தொழிலதிபர் அலி சப்ரியின் பங்குபற்றலுடன் கல்பிட்டி நகர பள்ளிவாசல்களுக்கான அரிசியும், பாடசாலை மற்றும் அரபுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பேரீச்சம் பழங்களும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்  வழங்கிவைக்கப்பட்டது.

Also Read : வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி

இந்நிகழ்வில் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், பாடசாலை அதிபர்கள், பாரளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எம்.எம். நௌபர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் நிஷாத் மற்றும் கல்பிட்டி பிரதேச ஊடக இணைப்பாளர் முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read : திருவள்ளூர் அருகே அனுமதி இன்றி தேர்தல் பணிமனை திறப்பு, பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை.

மேலும் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கான பேரீச்சம் பழங்களின் ஒரு தொகுதி புத்தளம் கலாச்சார மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் மாவட்ட செயலாளரின் பங்குபற்றுதலுடன் அண்மையில் வழங்கப்பட்டமை குறுப்பிடத்தக்கதாகும்.

VIDEOS

RELATED NEWS

Recommended