திருவள்ளூர் அருகே அனுமதி இன்றி தேர்தல் பணிமனை திறப்பு, பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை.
சுரேஷ் பாபு
UPDATED: Mar 20, 2024, 11:34:56 AM
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக தேர்தல் பணிமனையை கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான சக்கரவர்த்தி திறந்து வைத்து, தேர்தல் பணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்,
அப்போது திடீரென அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் காமேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் முறையான அனுமதி பெறாமல் தேர்தல் பணி திறக்கப்பட்டுள்ளதாகவும்,
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக கட்சி கொடிகள் சாலைகளில் நிறுவப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உடனடியாக அலுவலகத்தில் உள்ளவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார்,
இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள் தேர்தல் பிறக்கும் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு வந்த வட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான மதிவாணன் அனுமதி இன்றி தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட தொடர்பாக கேள்வி எழுப்பினார்,
அப்போது முறைப்படி அனுமதி பெற்றுள்ளதாக பாஜக திறப்பில் தெரிவிக்கப்பட்டவர் நிலையில் அதற்கான அனுமதி சான்றை காட்டுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து பாதுகாப்பிற்கு கூடுதல் காவல் துறையினர் இதனால் பாஜகவினர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதனிடையே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு காவல் உதவி ஆணையர் சபாபதி விசாரணை நடத்திய பின்னர் சாலையின் இரு புறமும் நிறுவப்பட்டிருந்த பாஜக கொடிகள் அகற்றப்பட்ட நிலையில் அனுமதி இன்றி கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.