• முகப்பு
  • இலங்கை
  • ஹாலி எலை, மற்றும் தியத்தலாவைவையில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் பலி

ஹாலி எலை, மற்றும் தியத்தலாவைவையில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் பலி

எம்.கே.எம்.நியார் - பதுளை

UPDATED: Apr 14, 2024, 12:12:54 PM

புதுவருட பிறப்பிற்காக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த சிறிய ரக கார் இன்று காலை ஹாலி எலை. இந்து ஆலயத்திற்கு முன் கட்டுப்பாட்டை இழந்து மண் திட்டில் மோதியதில் அதன் சாரதியும் மற்றுமொருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 


இதன் மேலதிக விசாரணைகளை ஹாலி எலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 இதே வேளை நேற்று இரவு தியத்தலகவை இரயில் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக வேன் ஒன்று சுமார் 80 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் நால்வர் வைத்திய சாலையிலும் இருவர் பண்டகரவளை வைத்திய சாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் காலி பகுதியைச் சேர்ந்தவர்கள் நோன்புப் பெருநாள் சுற்றுலா வந்தவர்கள் எனவும் தியத்தலாவை பொலிசார் தெரிவிக்கின்றனர். 

VIDEOS

Recommended