• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுரேஷ்பாபு

UPDATED: Mar 24, 2024, 8:21:31 PM

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்புத்தூர் ஒன்றியத்திறகுட்பட்ட வெங்குத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளமைந்திருக்கும் அற்புத ஜெபகோபுரம் ஏ ஜி தேவாலயத்தில் தலைமை போதகர் Rev.டாக்டர் J. செல்லதுரை தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதை தொ டர்ந்து ஆயிரக்கணக்கான விசுவாச பெருமக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி, ஓசன்னா ஓசன்னா என்று பாடியவாறு பவனி சென்றனர்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

தவணையில் தலைமை போடுகிறவர்கள் பேசுகையில் இயேசு கிறிஸ்து நமக்காக பிறந்தார் நம்முடைய பாவங்களை மன்னிக்க பிறந்தார் மனித குலத்தை மீட்டெடுக்க பிறந்தார் அவர் நமக்காக ஜீவனை கொடுத்திருக்கிறவர் என்று அவர் தெரிவித்தார்

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பெந்தகோஸ்து சபைகள் சிஎஸ்ஐ சபைகள் லுத்திரன் சபைகள், ரோமன் கேத்தலிக் சபைகள், ஊர்வலமாக குரு தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது

Also Watch : நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது - சமுத்திரக்கனி

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை வருகின்ற 31 ஆம் தேதி நடைபெற உள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended