• முகப்பு
  • ஆன்மீகம்
  • பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு  பங்குனி உத்திர தீர்த்தவாரி பஞ்சமூர்த்தி வீதியுலா நிகழ்ச்சி

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு  பங்குனி உத்திர தீர்த்தவாரி பஞ்சமூர்த்தி வீதியுலா நிகழ்ச்சி

ஆர்.தீனதயாளன்

UPDATED: Mar 24, 2024, 7:43:59 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும்.

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பல்லக்கு ஏழூர் புறப்பாடு வருகின்ற மார்ச் 27-மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

அதனை முன்னிட்டு கொடியேற்றம் தொடங்கி, 10-ஆம் நாளான இன்று குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பங்குனி உத்திர தீர்த்தவாரி பஞ்ச மூர்த்தி வீதியுலா நிகழ்ச்சியானது திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க, சிவன் பார்வதி வேடமிட்டு நடனமாடியவாறும், காளி ஆட்டம், புலியாட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Also Watch : நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது - சமுத்திரக்கனி

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை, சிவத்திரு கைலாய சிவபூத கண திருக்கூட்டம் சிவனடியார்கள் செய்திருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended