• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மன்னார்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 50 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.

மன்னார்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 50 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.

தருண் சுரேஷ்

UPDATED: Mar 25, 2024, 8:11:37 PM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பன்னியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் அறக்கட்டளை சார்பில் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

இதில் சீருடை புத்தகப் பை மற்றும் நோட்டு புத்தகம், எழுதுகோல் உள்ளிட்டவைகளை ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி தங்கவேல் முருகன் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார் . 

Also Watch : 2024 பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டு வேட்பாளர்களின் பட்டியல்

நிகழ்ச்சியில் முன்னதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் D. வனரோஜா, மற்றும் இடைநிலை ஆசிரியர் குணசீலன் ஆகியோர் வரவேற்றனர்.

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

நிகழ்வில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் அறக்கட்டளை தலைவர் ஆன்மீக செம்மல் வேதை சேதுபதி, அறக்கட்டளை துணைத் செயலாளர் ராஜ்மோகன், அறக்கட்டளை பொருளாளர் சிவசங்கரி பிரபு , மனித உரிமைக் கழகம் G. ராஜேந்திரன் ஆதி திராவிடர் கழகம் நலத்துறை ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

இதில் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். என கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக அறக்கட்டளையின் அக்னி சுரேஷ் மற்றும் மக்கள் சந்திப்பு நிருபர் புகழ் நன்றி கூறினார்.

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

VIDEOS

RELATED NEWS

Recommended