• முகப்பு
  • ஆன்மீகம்
  • கும்பகோணம் ஆலமன்குறிச்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் அருள்மிகு சப்த கன்னிகள் ஆலயங்களில் 34 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் ஆலமன்குறிச்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் அருள்மிகு சப்த கன்னிகள் ஆலயங்களில் 34 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

ரமேஷ்

UPDATED: Mar 25, 2024, 6:56:35 AM

கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கிராமத்தில் எழந்தருளிருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் மற்றும் அருள்மிகு சப்த கன்னிகள் ஆலயங்களில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளக்கும் இம்மாரியம்மன் ஆலயத்துக்கு 34 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து,

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

கடந்த 21ம் தேதி வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, நடைபெற்று, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது,

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

தொடர்ந்து இன்று 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, மூலவர் விமான கலசம் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

Also Watch : நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது - சமுத்திரக்கனி

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

VIDEOS

RELATED NEWS

Recommended