• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு எடுத்து வரப்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு எடுத்து வரப்பட்டது.

JK 

UPDATED: Mar 23, 2024, 1:41:33 PM

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.

Also Read : நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுகவில் சீட் கொடுக்காததன் எதிரொலி.

அங்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், ஆயுதம் தாங்கிய போலீஸ் முன்னிலையில் முசிறி கோட்டாட்சியர் ராஜன் ,தாசில்தார் பாத்திமா சகாயராஜ் ஆகியோர் முன்னிலையில் கண்டெய்னர் லாரியில் சீல் அகற்றப்பட்டு, முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழிலாளர்கள் உதவியுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

Also Read : தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய போலீஸ் காவலும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

Also Read : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்.

VIDEOS

RELATED NEWS

Recommended