• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

சுரேஷ் பாபு

UPDATED: Mar 23, 2024, 2:13:02 PM

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் பிரபு சங்கர் அனுப்பி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் பாலகணபதியின் மனைவி மீனாட்சி வேறு மாவட்டத்திற்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Also Read : நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுகவில் சீட் கொடுக்காததன் எதிரொலி.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 4 நாடாளு மன்ற தொகுதிகளை கொண்ட 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

இதில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி(தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி) ஆவடி, மாதவரம், என 6 சட்ட மன்ற தொகுதிகளை கொண்ட திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியாகவும், திருவொற்றியூர் வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய சட்டமன்ற தொகுதியாகவும், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 2 தொகுதிகள் ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய சட்டமன்ற தொகுதிகளாகவும்,

Also Read : தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.

திருத்தணி அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய சட்டமன்ற தொகுதியாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் 10 சட்ட மன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபு சங்கர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறக்கப்பட்டு, பின்னர் உள்ளே வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பெட்டிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

அதன் பின்னர் 10 சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள 3665 வாக்கு சாவடி மையங்களுக்கு 4797 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபு சங்கர் அனுப்பி வைத்தார்.

Also Read : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாலகணபதியின் மனைவி திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் மீனாட்சி உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended