• முகப்பு
  • விவசாயம்
  • விவசாயிகளின் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த இந்திய கூட்டணிக்கு ஆதரவு.

விவசாயிகளின் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த இந்திய கூட்டணிக்கு ஆதரவு.

JK 

UPDATED: Mar 29, 2024, 10:52:33 AM

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள அரங்கில் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது, 

இதில் தமிழகம் முழுவதுமிருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Also Watch : கூட்டணி வைத்திருந்தால்தான் கேட்ட சின்னம் கிடைக்கும் - சீமான்

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை தங்களது தேர்தல் அறிக்கையாக வெளியிடுபவர்களுக்கு தங்களது ஆதரவு என்ற நிலைப்பாடு என்ற வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டமாக்கப்படும், 

மின்சார திருத்தசட்டத்தை ரத்துசெய்தல் 100நாள் வேலைதிடடத்தில் ஈடுபடுபவர்களை விவசாய தொழிலுக்கு பயன்படுத்துதல் போன்ற கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக இந்தியா கூட்டணியில் ராகுல்காந்தி அறிவித்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Also Watch : தனது கட்சியின் சின்னத்தையே மறந்து கை சின்னத்தில் ஓட்டு கேட்ட ஜிகே வாசன்

மேலும் காவிரியின் குறுக்கே, பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என கர்நாடகா, ஆந்திரா தமிழக விவசாயிகளுக்க அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது, விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தமிழக அரசும், எதிர்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல் எழுப்பி வருகின்றனர்.

இச்சூழலில் பாலாறு, காவிரியின் குறுக்கே அணைகட்டுவதால் தமிழகத்தில் விவசாயம் அழிந்துபோகும் என்பதால் மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசு அணைகளை கட்ட அனுமதிக்ககூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

VIDEOS

RELATED NEWS

Recommended