• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு.

அஜித் குமார்

UPDATED: Mar 23, 2024, 10:27:22 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி.

ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

Also Read : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோவில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Also Read : இந்திய எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்வதா ஓபிஎஸ் கண்டனம்

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.

மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்..

VIDEOS

RELATED NEWS

Recommended