• முகப்பு
  • இலங்கை
  • புறக்கோட்டை மிதக்கும் சந்தை (புளோட்டிங் மர்கெட்) மீள புனரமைப்பு

புறக்கோட்டை மிதக்கும் சந்தை (புளோட்டிங் மர்கெட்) மீள புனரமைப்பு

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Mar 28, 2024, 4:04:00 AM

புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மிதக்கும் சந்தை (புளோட்டிங் மர்கெட்) மீள புனரமைத்து அது சுற்றுலாப் பிரயாணிகள் கவரக்கூடிய வகையில் பயன்படுத்த கூடிய வகையில் ஜப்பான் முதலீட்டுக் கம்பனி ஒன்று மீள பாரம் எடுத்து அதனை அடுத்த 6 மாதங்களுக்குள் அழகுபடுத்த உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகார சபையில் அதிகாரிகளுடன் கைச்சாத்திடப்பட்டது.

Also Read : நாட்டில் ஜனநாயகத்திற்கு பதிலாக பொலிஸ் இராஜ்ஜியமே உள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இத் திட்டத்தினை ஏற்கனவே 2014 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் 352 மில்லியன் ருபா செலவிடப்பட்டு செப்பனிட்டு திறந்து வைக்கப்பட்டது.

Also Read : புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்

இருந்தும் இத் திட்டம் வெற்றியளிக்கவில்லை மீண்டும் கோட்டபாய ராஜபக்ஷ  ஜனாதிபதியாக பதவி காலத்திலும் மீள 25 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீளத் திறந்து வைக்கப்பட்டது.

அத்திட்டம் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Also Read : முஸ்லிம்கள் பிளவுபடுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக முடியும் - உலமா சபை பொதுச்செயலாளர்

 

VIDEOS

RELATED NEWS

Recommended