• முகப்பு
  • அரசியல்
  • மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதா இருசக்கர வாகனத்தில் கூட்டணிக் கட்சயினருடன் பேரணியாக வந்து வேட்பு மனு தாக்கல்.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதா இருசக்கர வாகனத்தில் கூட்டணிக் கட்சயினருடன் பேரணியாக வந்து வேட்பு மனு தாக்கல்.

செந்தில் முருகன்

UPDATED: Mar 27, 2024, 7:10:23 PM

தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

எட்டு தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு முக்கிய பிரமுகர்கள் போட்டி போட்டதால் வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி தடுமாறியது.

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் நீண்ட இழுபறிக்கு பின் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இன்று மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு ஆர்.சுதா வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் சுதா இருசக்கர வாகனத்தில் கூட்டணி கட்சியினருடன் பேரணியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். 

வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவுடன் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட 6பேர் அறையில் அனுமதிக்கப்பட்டனர்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி வேட்பாளருடன் நான்கு பேர் மட்டும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதால் அப்போது மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் அங்கிருந்து விலகி அரையை விட்டு வெளியேறாமல் அங்கேயே அமர்ந்தனர்.

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

திமுகவின் மக்கள் பிரதிநிதியே தேர்தல் விதிமுறையை மீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் சுதா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக ஆடுதுறையைச் சேர்ந்த பிரதாபன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended