• முகப்பு
  • அரசியல்
  • மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்.

ரமேஷ்

UPDATED: Mar 27, 2024, 8:25:13 PM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், தலைமையில் ராயல் மஹாலில் நடைபெற்றது.

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

இதில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் நசீர் முகமது, , மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுதா கலந்து கொண்டு பேசுகையில் எவ்வளவோ தலைவர்கள் இந்த தொகுதியை கேட்ட போதிலும் ராகுல் காந்தி என்னை நம்பி இந்த தொகுதிக்கு அனுப்பி இருக்கிறார்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

ராகுல் காந்தியே இங்கு நிற்பதாக கருதி அனைவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

தற்போதைய மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பேசும்போது சொன்னார், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Also Watch : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்

நான் புதிய வேட்பாளராக இருந்தாலும் நான் ஏதாவது சிறு தவறுகள் செய்தால் பொறுத்து, மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நேற்று வேட்பாளராக அறிவித்த பின்பு மயிலாடுதுறை மக்களின் மனதில் ஒரே நிமிடத்தில் அமர்ந்தேன்.

இப்போது வாக்குறுதி அளிக்கிறேன் நான் மயிலாடுதுறையில் உங்களோட நிரந்தரமாக வசிக்கப்போகிறேன். ஜி.கே வாசன், கிருஷ்ணசாமி போன்ற ஒற்றை மனிதர்கள்தான் பாஜகவில் கூட்டணியில் உள்ளனர்.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

ஆனால் இந்தியா கூட்டணியில் பலம் வாய்ந்த, அழுத்தமான, கொள்கை உறுதிகொண்டவர்கள் கூட்டணியில் உள்ளனர். இந்த தேசம் மாபெரும் சுதந்திரப் போராட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த யுத்தத்தில் காந்தி ஜெயிக்க வேண்டுமே தவிர, கோட்சே ஒருபோதும் ஜெயித்து விடக்கூடாது என்று தெரிவித்தார்.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கோசி மணி இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended