• முகப்பு
  • கல்வி
  • பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விவகாரம் - பள்ளியில் அதிகாரிகள் விசாரணை.

பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விவகாரம் - பள்ளியில் அதிகாரிகள் விசாரணை.

ராஜ்குமார்

UPDATED: Mar 19, 2024, 12:32:35 PM

கோவையில் நேற்று பிரதமர் கலந்துகொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.

Also Read : யானைக்கு மதம் பிடிப்பது போல்  திமுகவுக்கு வெறி பிடித்து உள்ளது - அண்ணாமலை

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்திரவிட்டுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

Also Watch : ரோட் ஷோ கோவையில் மக்கள் வெள்ளத்தில் மோடி

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில், மாணவிகள் பங்கேற்றது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். அதில் , தேர்தல் பிரச்சாரம் போன்ற செயல்பாடுகளுக்கு குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகளை மீறி மாணவ, மாணவிகளை அழைத்து சென்றுள்ளதாக ஊடகங்களின் வழியாக தெரிய வந்துள்ளதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தலைமறைவு.

மேலும், அந்நிகழ்விற்கு மாணவர்களை அழைத்து சென்ற தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மீது கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

அதனடிப்படையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் புனிதா, அந்தோணியம்மாள், மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் பள்ளி தலைமையாசிரியை புகழ்வடிவு மற்றும் மற்றும் மாணவிகள் , ஆசிரியர்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

Also Read : திருப்பூர் பல்லடம் கள்ளக் கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை கொலையாளியை சுட்டு பிடித்தனர்

விசாராணையின் முடிவில் தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவிகளின் விளக்கத்தை எழுத்துப்பூர்வாக எழுதி வாங்கி விட்டு கிளம்பினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended