'ரோட் ஷோ' கோவையில் மக்கள் வெள்ளத்தில் மோடி

ராஜ்குமார்

UPDATED: Mar 18, 2024, 3:50:19 PM

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார்.

Also Read : திருப்பூர் பல்லடம் கள்ளக் கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை கொலையாளியை சுட்டு பிடித்தனர்.

பின்பு, சுமார் 6 மணி அளவில் பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு பிரதமர் வந்தடைந்தார்.

பா.ஜ.க வினரின் உற்சாக வரவேற்போடு அங்கு இருந்து பேரணி துவங்கியது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மேலதாளங்கள் முழங்க மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Also Read : உதகையில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் மிதந்த புழுக்கள்.

பேரணியின் நிறைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே, 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மலரஞ்சலி செலுத்தினார்.

Also Watch : திருச்சியில் திமுகவில் என்ன சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதற்கு காஜாமலை விஜி தான் காரணமாக இருப்பார்

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஏ.பி.முருகானந்தம், ஹெச்.ராஜா, சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மற்றும் பா.ஜ.க வின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு 7.20 க்கு நிறைவுற்றது.

Also Read : பொன்முடிக்கு உயர்கல்வித் துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுப்பு.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று இரவு பிரதமர் கோவை ரேஸ் கோர்ஸ் - ல் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கோயம்புத்தூரில் இருந்து கேரளா புறப்படுவதாக திட்டமிடப்பட்டு உள்ளது.

Also Read : பூந்தமல்லி அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி வேன் கிளீனர்.

பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சிக்காக கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குறிப்பாக பேரணி நடைபெறும் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

VIDEOS

RELATED NEWS

Recommended