• முகப்பு
  • குற்றம்
  • உதகையில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் மிதந்த புழுக்கள்.

உதகையில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் மிதந்த புழுக்கள்.

அச்சுந்தன்

UPDATED: Mar 18, 2024, 12:48:47 PM

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி உள்ளார்.

Also Read : யானைக்கு மதம் பிடிப்பது போல்  திமுகவுக்கு வெறி பிடித்து உள்ளது - அண்ணாமலை

இதனைத் தொடர்ந்து கடைக்கு வந்து பாலை சூடு செய்வதற்காக பாத்திரத்தில் பாக்கெட்டை பிரித்து கொட்டியுள்ளார். அப்பொழுது பால் முழுவதும் வெள்ளை புழுக்கள் மிகுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

இதனை தொடர்ந்து உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி பாக்கெட் மட்டும் பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பாக்கெட்டை சோதனை செய்த பொழுது பாக்கெட் ஆனது இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. 

Also Read : யானைக்கு மதம் பிடிப்பது போல்  திமுகவுக்கு வெறி பிடித்து உள்ளது - அண்ணாமலை

மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கையில் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த எண் கொண்ட ஆவின் பால் பாக்கெட் களை ஆய்வு செய்ய உள்ளதாகவும், தொடர்ந்து இதனை அடுத்து ஆய்வு அறிக்கை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Also Read : பொன்முடிக்கு உயர்கல்வித் துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுப்பு.

நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகமான மக்கள் ஆவின் பாலை பயன்படுத்தி வரும் நிலையில் பால் பாக்கெட்டில் பு ழு மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : பூந்தமல்லி அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி வேன் கிளீனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended