• முகப்பு
  • இலங்கை
  • வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: Mar 27, 2024, 5:09:15 AM

நுரைசோலை, இலந்தையடி, ஆலங்குடா, மற்றும் ஏத்தாலைப் பகுதி கடற்கரையில் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து அவைகள் ஆமைக் குஞ்சுகளாக மாறிய பின்னர் கடற்கரையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read : போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள் தரவு அமைப்பில் உள்ளிடப்படும்

இந்த நிலையில் கடந்த மாதம் ஆமை முட்டைகளை சேகரித்து பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டு 45 நாட்களின் பின்னர் முட்டையிலிருந்து 40 ஆமைக் குஞ்சுகள் வெளியில் வந்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Also Read : இசைக்குயில் கில்மிஷாவுக்கு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பாராட்டு விழா

இதன்போது ஆமைப் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குஞ்சுகளை நேற்று இரவு பாதுகாப்பாக கடலில் விட்டனர். 

குறித்த கடலாமை அரியவகையான (Olive Ridley) ஒலிவ நிறச் சிற்றாமை வகையச் சார்ந்தது என இலந்தையடி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Also Read : ஊடகவியலாளர்களின் கடமையை தடுப்பது மனித உரிமை மீறலாகும்

VIDEOS

RELATED NEWS

Recommended