• முகப்பு
  • இலங்கை
  • அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் வாரங்களில் கடுமையான தொழிற்சங்க போராட்டம்

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் வாரங்களில் கடுமையான தொழிற்சங்க போராட்டம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 28, 2024, 2:32:55 AM

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புடன் சமாந்தரமாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் வாரங்களில் கடுமையான தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

Also Read : புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

இதன்படி, முதற்கட்டமாக அரசாங்கத்தின் அனைத்து நிறைவேற்று தர அதிகாரிகளும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும், பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தமது தொழில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், வடமேல் மாகாண பிரதம செயலாராக இருந்த ரஞ்சித் ஆரியரத்னவை எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி நீக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. 

Also Read : ஆலங்கேனி ஶ்ரீ மஹா விநாயகர் ஆலய பூங்காவனத் திருவிழா

 அதன்படி நேற்று (27) இடம்பெற்ற புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு நிறைவேற்று தர உத்தியோகத்தரும் பங்குபற்றமாட்டார்கள் என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் அரச நிறைவேற்று தர உத்தியோகத்தர்களின் கூட்டுக் குழு தெரிவித்திருந்தது.

 புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்னே ஆகியோருக்கு சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.

Also Read : புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் 2024 ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்கள்

 இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன, அரசியல் அழுத்தத்தின் காரணமாக அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தி, வடமேல் மாகாணத்தின் அனைத்து நிறைவேற்று அதிகாரிகளும் அண்மையில் குருநாகலில் கடும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிட தக்கது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended