• முகப்பு
  • இலங்கை
  • புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 25, 2024, 6:07:35 PM

இம்மாதம்  29ஆம் திகதி புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தினங்களில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், வரும் யாத்ரீகர்கள் மற்றும் அவர்களது பயணப் பொதிகள் மற்றும் அவர்களின் பயணப் பொதிகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

Also Read : முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம்

இதன்படி, சமூக பொலிஸ் குழுக்கள் மற்றும் அந்தந்த தேவாலயங்களின் பாதிரியார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27)  ஆம் திகதி அனைத்து தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் நிலையத் பொறுப்பளர்கள்  தமது பொலிஸ் எல்லைக்குட்பட்ட அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் ஏனைய தேவாலயங்களுக்கும் நேரில் சென்று அருட் தந்தையர்கள் ,நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Also Read : கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை தயாரித்து செயல்படுத்த அந்த தேவாலயங்களின் உறுப்பினர்கள். .மேலும், காவல் நிலையங்களுக்கு பொறுப்பான மாவட்ட அலுவலர்கள் நாளை (26-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம்  (27-ந்தேதி) தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் பகுதியிலும் உள்ள தேவாலயங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை சரிபார்க்க வேண்டும் என்றும்பொலீஸ்மா அதிபரினால்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : வளிமண்டலவியல் ஓர் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா

VIDEOS

RELATED NEWS

Recommended