• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மயிலாடுதுறையில் கோவில் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாயும் 2 மகள்களும் தருணா

மயிலாடுதுறையில் கோவில் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாயும் 2 மகள்களும் தருணா

செந்தில் முருகன்

UPDATED: Mar 27, 2024, 5:32:20 AM

மயிலாடுதுறை மாவட்டம் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை முறைகேடாக விற்பனை செய்து தனது மாற்றுத்திறனாளி கணவரை தாக்கிய கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் இன்று காலையிலிருந்து கோவிலில் அங்கபிரதட்சனம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோயில் நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டு 12 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி குணசேகரன். மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறார்.

இவரது மறைந்த தந்தை முத்துசாமி பெயரில் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 144 குழி இடம் உள்ளது.

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

அந்த இடத்தில் 50 குழி இடத்தை தனது சகோதரி இந்திராவும், மாயூரநாதர் ஆலயத்தின் கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன் துணையுடன் முருகன் என்பவருக்கு பகுதி மாற்றம் செய்து தந்துள்ளார். இடத்தை வாங்கிய முருகன் 80 குழி இடத்தில் வேலி போட்டுள்ளார்.

குணசேகரனிடம் எழுதிவாங்கிய 50குழி இடத்தை இந்திரா கணேசன் உதவியுடன் 80குழி என்று திருத்தி முருகனுக்கு முறைகேடாக எழுதி கொடுத்தது தெரிய வந்தது.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

இந்த பிரச்சனை தொடர்பாக மாயூரநாதர் கோவில் நிர்வாகம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முதல் காவல்துறை நிலஅபகரிப்பு பிரிவு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வரை ராஜேஸ்வரி புகார் மனு அளித்துள்ளார்.

ஆனால் கோவில் உதவி கண்காணிப்பாளர் கணேசன் தலையீட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்த பிரச்சனை தொடர்பாக குணசேகரனின் சகோதரி இந்திரா, இடத்தை வாங்கிய முருகன் குடும்பத்தினர் மற்றும் கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் இன்று தங்களை தாக்கியதாகவும்

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்

குணசேகரணை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ராஜேஸ்வரி தனது மகள்கள் துர்காதேவி, மீனாட்சி ஆகியோருடன் மாயூரநாதர் கோவிலில் இன்று காலை முதல் அங்கபிரதட்சனை செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாய் தனது இரண்டு மகள்களுடன் காலையில் இருந்து கோவில் நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

காலையில் போலீஸ் வந்து பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றதால் பட்டினியுடன் போராட்டம் நடத்தி வருவதாகவும், கோவில் நிர்வாகத்தினர் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாகவும் தங்களின் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கும்வரை கோவிலை விட்டு வெளியே செல்லமாட்டோம் என்று போராட்டத்தை இரவிலும் தொடர்ந்தனர்.

இதனால் கோவிலை பூட்டமுடியவில்லை. தொடர்ந்து கோவிலுக்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நாளை இடப்பரச்சனை தொடர்பாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended