• முகப்பு
  • இலங்கை
  • நோர்வுட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு - கணபதி கனகராஜ்

நோர்வுட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு - கணபதி கனகராஜ்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 28, 2024, 10:29:09 AM

நோர்வுட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read : அரசு பள்ளிகளில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.

இன்று அட்டன் உதவி தொழில் ஆணையாளர் திணைக்களத்தில் உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் ஆடை தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகளுக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதன்படி டிசம்பர் மாதம் வரை ஊழியர்களுக்கு செலுத்தப்படாமல் இருந்த பாக்கி சம்பளம் சுமார் இரண்டரை கோடி ரூபாய்கள் இன்று வழங்கப்பட்டது.

Also Read : புத்தளம் நகரின் கல்வி மேம்பாட்டிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு தலைவன்

இதுவரை செலுத்தப்படாமல் இருக்கின்ற ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 90 மில்லியன் ரூபாய்களை செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அத்துடன் 5 வருடங்களுக்கு மேற்பட்ட சேவையை உடைய ஊழியர்களுக்கு அவர்களின் விண்ணப்பத்திற்கு ஏற்ப ஏப்ரல் மாதம் தொடக்கம் சேவைகால பணத் தொகையை மீள செலுத்துவதாக ஆடை தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. 

அத் தொகையை தொழில் திணைக்களத்தின் ஊடாகவே செலுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு தொழிற்சாலையை நம்பி இருக்கின்ற 800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஆடை தொழிற்சாலை மீள திறக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

Also Read : குவைத் தேசிய தினம் கொழும்பில் இடம் பெற்றது

 எதிர்வரும் மே மாதம் ஆடை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவாதமளித்துள்ளது.

நோர்வுட் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நிற்கதியாக இருககும் தொழிற்சாலை ஊழியர்கள் தமது பிரச்சனைக்கு தீர்வை பெற்று தருமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் பிரச்சனை ஆராய்ந்து தீர்க்குமாறு அமைச்சர் ஜீவன் கொண்ட மானின் பணிபுரைக்கமைய கடந்த நான்கு மாதங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அதற்கு அமைய இன்று நோர்வுட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் ஊதிய பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

Also Read : கடற்றொழிலாளர் விடயத்தில் அழுத்தங்கள் அதிகரிக்குமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்துவிட்டு போராடுவேன்

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் பிரதி தலைவருடன் காங்கிரசின் தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ் மற்றும் நோர்வுட்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். எதுவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended