உலக காதலர் தினம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 14, 2023, 7:08:41 AM

மாமேதை கார்ல் மார்க்ஸ் _ ஜென்னிமார்க்ஸ் இருவரின் காதலே புகழ் பெற்ற பெரும் காதலாக எண்ணி இன்றளவும் .....உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. இளம் வயதுடையவர்களுக்கு காதலர் தினம் என்றாலே மனதில் ஏற்படும் சந்தோஷமே அலாதி தான். காதல் என்பது ஒருவர் மற்றொருவர் மீது காட்டும் அன்பும், பாசமும் தான். திருமணம் ஆகாத இளம் வயதினர் மட்டும் காதல் கொள்வது இல்லை. திருமணம் ஆன கணவன் -மனைவி, தாத்தா- பாட்டி, அம்மா-அப்பா என உறவுகள் ஒருவர் மனதை மற்றவர் புரிந்து அதற்கேற்றவாறு தங்களது வாழ்க்கையில் வசந்தத்தில் என்றென்றும் பயணிப்பவர்கள். ரோமியோ - ஜூலியட், லைலா-மஜ்னு, ஷாஜஹான்-மும்தாஜ், கண்ணகி-கோவலன், இராமன் - சீதை என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இருப்பினும், உழைக்கும் மக்களுக்காகவும்....வறுமையின் வாடிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் இடை விடாமல் சிந்தித்து மாற்றம் காண விளைந்த மார்க்ஸுக்கு துணையாக _தோழியாக இருந்தவர் ஜென்னி மார்க்ஸ். எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக நாம் சேவை செய்ய முடிவெடுத்த பிறகு......நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எந்தத் துன்பங்களும் நம்மைத் துவளச் செய்திட முடியாது என்பார் மார்க்ஸ். பிறர் நலனுக்காக பாடுபட்ட மார்க்ஸ் _ஜென்னியைப் போல்......இப்போதும் உலகில் எங்காவது சிலர் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். அந்த நல்ல உள்ளங்களுக்குத் தான் காதலர் தினம் பொருந்தும். ஒருவர் மீது ஒருவர் கொள்வது அன்பு. இன்றைய தலைமுறையினர் காதல் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தும் விதமாக தங்களது நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்ததால், கடந்த காலங்களில் இருந்த காதலர் தினம் கொண்டாட்டம் குறையத் தொடங்கி... மங்கத் தொடங்கியுள்ளது. இனி வருங்காலங்களிலாவது, இந்த காதலர் என்ற சொல்லை அனைவரும் போற்றி பாராட்டும் விதமாக அமைத்திட இளம் வயதினர்கள் சபதம் மேற் கொள்வோம்... சிறப்பு செய்தியாளர் : மாமுஜெயக்குமார்.

VIDEOS

RELATED NEWS

Recommended