உலக புகையிலை ஒழிப்பு தினம்!

வாசுதேவன்

UPDATED: May 31, 2023, 11:30:50 AM

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் நேற்று (31.05.2023) மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். 

நாடு முழுவதும் நேற்று புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைஞ்சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இவ்வுறுதிமொழியில் நாங்கள் ஒருபோதும் புகைப்பிடிக்கவோ அல்லது புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ள மாட்டோம் எனவும், என்னுடன் பணிபுரியும் பணியாளர்கள் புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன் என்றும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முழு பங்களிப்பை அளிப்பேன் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended