• முகப்பு
  • காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலால் இன்னல்களுக்கு ஆளாகும் தொழிலாளர்கள்.

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலால் இன்னல்களுக்கு ஆளாகும் தொழிலாளர்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : சமூக ஆர்வலர் இரா.வெங்கடேசன் (மிஸ்ரிநகர் சமூக நல கூட்டமைப்பு குழுமம்) கூறுகையில் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரக்கடம், ஸ்ரீபெருமந்தூர், சிப்காட் போன்ற பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் வசதிக்காக தனியார் கம்பெனி நிர்வாகத்தினர்களால் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 20தேதி டிசம்பர் 2021 முதல் காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்துவதற்க்காக என்று கூறி காஞ்சிபுரம் நகரை சுற்றியுள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்ச்சாலைகளுக்கு சென்று வரும் வாகனங்கள் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை காஞ்சிபுரம் நகருக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் காஞ்சிபுரம் வெளிப்பகுதிகளான வெள்ளை கேட், பொன்னேரிகரை, கீழம்பி கூட்டுரோடு, பெரியார் நகர் பகுதிகளில் வாகனங்கள் நிற்கவேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே தொழிலார்கள் பணிக்கு செல்லும்போதும் பணிமுடித்து வீடு திரும்பும் போதும் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேற்கண்ட பகுதிகளில் முறையான போக்கு வரத்து வசதிகள் இல்லாததால் தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் மினி பஸ்ஸில் பயணம் செய்து மிகவும் சிரமத்திற்கும் , மன உலைச்சளுக்கும் ஆளாகிறார்கள். குறிப்பாக பெண்கள் ( ஆட்டோவில் பயணம் செய்யும் பொழுது பெண் பணியாளர்கள் கூட்டநேரிசலில் சிக்கி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் ) மற்றும் இரவு நேர பணியாளர்கள் பலர் இன்னலுக்கு ஆளாகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு நெரிசலை கட்டுப்படுத்த காலை 7.30 மணிக்குள்ளும் மாலை 6.00 மணிக்கு மேலும் வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,Kanchipuram news,heavy traffic

VIDEOS

RELATED NEWS

Recommended