• முகப்பு
  • tamilnadu
  • ஆண்நண்பரை அடித்துப்போட்டு விட்டு விதவைப் பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை.

ஆண்நண்பரை அடித்துப்போட்டு விட்டு விதவைப் பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஏரிக் கரையில் ஆண்நண்பரை அடித்துப்போட்டு விட்டு விதவைப் பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை. ஆண்நண்பரை அடித்துப்போட்டு விட்டு இளம்பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோகவும் எடுத்து 2 பேரிடம் இருந்த செல் போன்கள் நகை பணத்தையும் பிடுங்கிக்கொண்டு தப்பி சென்றக்கும்பலை போலீசார்பிடித்துள்ளனர். நாமக்கல் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.கடல் பகுதி, ஏரிபகுதிக்கு ஆண் நண்பர்களுடன் செல்லும் பெண்களைகுறிவைக்கும் கும்பலில் வெறிச் செயல் தொடர்ந்து வருகிறது. நாமக்கல் பகுதியைச்சேர்ந்த அந்த 31வயது இளம் விதவைப்பெண், திருச் செங்கோட்டைச் சேர்ந்த ஒருவருடன் பழகிவந்திருக்கிறார். இருவரும் கடந்த 19 ம் தேதி அன்று நாமக்கல் அடுத்த வீசானம்ஏரி பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்கள். அப்போது அங்கேவந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் மிரட்டி அவர்களிடம் இருந்த தங்கச்செயின் , பணத்தையும் பறித்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் அந்த இரண்டு பேரையும் பைக்கில் உட்காரவைத்து அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பாழடைந்தக்கட்டடத்திற்கு அழைத்துச்சென்றிருக்கிறார்கள் . அந்த கட்டிடத்தில் ஆண்நண்பரை அடித்து போட்டு விட்டு அந்த இளம் பெண்ணை கொடூரமானமுறையில் கூட்டுப்பாலியல் வன் கொடுமை செய்து இருக்கிறார்கள். அதை வீடியோவாகவும் பதிவுசெய்து இருக்கிறார்கள். இதைப்பற்றி வெளியே சொன்னால் இருவரையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கிறது. பாதிக்கப் பட்டபெண் துணிச்சலாக நாமக்கல்காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். போலீசாரின் விசாரணையில் இளம் பெண்ணை கூட்டுபாலில் வன்கொடுமை செய்தது அழகு நகரை சேர்ந்த நவீன் குமார், விசானத்தைச்சேர்ந்த கல்லூரிமாணவர் தினேஷ்குமார் , பெயிண்டர் முரளி, வல்லரசு ஆகியோர் என்பது தெரியவந்திருக்கிறது. அதில் நவீன் குமார், தினேஷ்குமார், முரளி ஆகியோரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்த பணம், நகை, செல் போன்களையும் பறிமுதல் செய்து உள்ளனர். தலைமறைவாக இருக்கும் வல்லரசுவை தேடி வருகின்றனர். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended