கன்னியாகுமாரி அடுத்த அதிமுக மாவட்ட செயலாளர் யார்? 

குமரி ஒற்றன்

UPDATED: May 29, 2023, 7:09:41 AM

கன்னியாகுமரி மாவட்டதில் அதிமுக மாவட்ட செயலாளர் பதவி காலியாக உள்ளது.

முன்பு மாவட்ட செயலாளராக s.a.அசோகன் இருந்து வந்தார், இவர் ops இன் தீவிர விசுவாசி.. கட்சி பொது செயலாளராக எடப்பாடி தேர்வானதும் ops தரப்பு ஓரம்கட்டப்பட்டது.

இதனை அடுத்து மாவட்ட செயலாளர் பதவிக்கு குமரி மாவட்ட அதிமுக வினர் சென்னைக்கு படை எடுத்து வருகின்றனர்..

களத்தில் பல மூத்த தலைகளும் உள்ளனர்.. இளைய தலைமுறை அதிமுக வினரும் பதவிவியை பெற எடப்பாடியை நேரில் சந்தித்து வருகின்றனர்.

மூத்த தலைவர்களில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் , கன்னியாகுமாரி சட்ட மன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் k.t. பச்சைமால் பெயர்கள் வருகின்றது.

இளைய தலைவர் பட்டியலில் மாவட்ட அண்ணா தொழிற் சங்க தலைவர் G.சுகுமாரன் பெயரும், பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என மகளிர் அணியினர் வேண்டுகோள் விடுகின்றனர்.

அதன் அடிப்படையில் பார்த்தால் நாகர்கோயில் மாநகர 11 வார்டு உறுப்பினர் நாஞ்சில் ஸ்ரீ லிஜா அவர்களும் வருகின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் மேலே குறிப்பிட்டவர்களில் யார் அந்த பதவியை பறிக்கப் போகிறார்கள் என்று.

VIDEOS

RELATED NEWS

Recommended