• முகப்பு
  • அரசியல்
  • மயிலாடுதுறையில் பாமக காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தபோது காங்கிரஸ் – பாஜக இடையே போட்டி கோஷமிட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை.

மயிலாடுதுறையில் பாமக காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தபோது காங்கிரஸ் – பாஜக இடையே போட்டி கோஷமிட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை.

செந்தில் முருகன்

UPDATED: Mar 27, 2024, 7:18:59 PM

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஆர்.சுதா போட்டியிடுகிறார்.

கடைசி நேரத்தில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், மிகவும் தாமதமாக 2:15 மணி அளவில் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார்.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

இறுதி நாள் என்பதால் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ம.க.ஸ்டாலின் அப்போது வேட்புமனு தாக்கல் செய்து கொண்டு இருந்தார்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்; பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியினர் திரண்டு இருந்தனர்.

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

இரண்டு பக்கமும் எதிரெதிர் தரப்பினர் நின்றுகொண்டு வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பாஜகவினர் மோடியின் புகழ்பாடி வாழ்த்து கோஷம் எழுப்ப, எதிரே நின்ற திமுக கூட்டணி கட்சியினர் நமது சின்னம் கைச்சின்னம் என்று பதில் கோஷம் எழுப்பினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி வந்து தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

இதனால் அங்கு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு இரண்டு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.

திமுகவினர் சிலர் பாதுகாப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே வந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றியபோது காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

VIDEOS

RELATED NEWS

Recommended