• முகப்பு
  • அரசியல்
  • முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐடி ரைட் நடப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஐடி என்றால் என்ன என எதிர்கேள்வி கேட்டு நழுவி சென்றார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐடி ரைட் நடப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஐடி என்றால் என்ன என எதிர்கேள்வி கேட்டு நழுவி சென்றார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 30, 2023, 12:30:49 PM

தஞ்சாவூர் 30.5.23தஞ்சை கரந்தையில் உள்ள அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மீன் குஞ்சுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். அப்போது தமிழகத்தில் மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.

உள்நாட்டு மீன் உற்பத்தியை தமிழகத்தில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது 75 சதவீத மீன் குஞ்சுகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடல் மீன்களும் சேர்த்து 6500 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தலா 5000 ரூபாய் தரக்கூடிய திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுள்ளார் இன்னும் அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது முதல்வர் கனிவுடன் பரிசீளித்து நடவடிக்கை எடுப்பார்.

முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐடி ரைட் நடப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஐடி என்றால் என்ன என எதிர் கேள்வி கேட்டு நழுவி சென்றார்.. தஞ்சையில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.

அதற்கான நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும் மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரியுடன் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended