வண்டியில் லிஃப்ட் கொடுத்தால் என்ன பலன்....,.?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

லிஃப்ட்கேட்பது போலநடித்து பைக்கை திருடிச்சென்ற இளைஞர்கள்! சென்னை கோடம் பாக்கத்தை சேர்ந்த சரண்ராஜ் வயது 24. பல்வேறு ஊர்களுக்குச் சென்று நடனநிகழ்ச்சி நடத்தும் நடனக்கலைஞராக இருந்து வருகிறார். கடந்த 19 ஆம் தேதி வெளியூர்நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு சென்னைசென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவர் ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த தனதுவிலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் (CBR Honda) வீடு திரும்பியுள்ளார். அப்போது சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே இரண்டு இளைஞர்கள் சரண் ராஜை வழிமறித்து, எழும்பூரில் இறங்கி கொள்வதாகவும் லிப்ட் கொடுக்கும் படியும் கேட்டுள்ளனர். அதன் படி பைக்கில் ஏற்றிக்கொள்ள, அங்கிருந்து எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் வரும்போது, லிப்ட்கேட்ட இருவரும் இங்கேயே இறங்கிக்கொள்வதாக கூறி இறங்கி உள்ளனர். பிறகு சரண் ராஜிடம் லிப்ட் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தவர்கள், பைக்மிகவும் அழகாக உள்ளது என கூறி, உதவி செய்த உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டு சரண் ராஜை பைக்கிலிருந்து கீழே இறக்கி உள்ளனர். அவரும் சிரித்துக்கொண்டே செல்பிக்கு போஸ் கொடுக்க, லிப்டில்வந்த 2 பேரில் ஒருவர் பைக்கில் ஏறி அமர்ந்துகொண்டு செல்ஃபிக்கு போஸ் கொடுத்து உள்ளார். திடீரென சரண் ராஜை இழுத்து கீழே தள்ளிவிட்டு, மற்றொருநபரும் பைக்கில் ஏறிக் கொள்ள அங்கிருந்து பைக்குடன் இருவரும் தப்பிச்சென்று விட்டனர். இந்தசம்பவம் குறித்து சரண்ராஜ் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எழும்பூர் குற்றப் பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததோடு இருசக்கர வாகனபதிவு எண்ணை வைத்து தேடிவந்தனர். புளியந்தோப்பு காந்தி நகரைச் சேர்ந்த சசி குமார் என்ற நபரை எழும்பூர் போலீசார் கைதுசெய்து அவரிடம் இருந்து திருடப் பட்ட விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலை மறைவாகவுள்ள சசி குமாரின் கூட்டாளி தீனா என்பவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இவர்கள் இதே பாணியில் விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து லிஃப்ட்கேட்பது போல் நடித்து திருடும் திருடர்கள் என்பது தெரியவந்து உள்ளது. ஏற்கனவே செம்பியம் பகுதியில் ஒரு பைக்திருட்டு வழக்கும் கொலை, வழிபறி உள்ளிட்ட போன்ற வழக்குகளும் இவர்கள் மீது நிலுவையில் உள்ளது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended