• முகப்பு
  • district
  • பிறப்பு, இறப்பு சான்று பெறுவதில் ஊராட்சி மன்றத் தலைவரின் பங்கு என்ன பதிவாளர் யார் அவருக்குண்டான அதிகாரம் என்ன ?

பிறப்பு, இறப்பு சான்று பெறுவதில் ஊராட்சி மன்றத் தலைவரின் பங்கு என்ன பதிவாளர் யார் அவருக்குண்டான அதிகாரம் என்ன ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.!! பிறப்பு, இறப்பு சான்று பெறுவதில் ஊராட்சி மன்றத் தலைவரின் பங்கு என்ன பதிவாளர் யார் அவருக்குண்டான அதிகாரம் என்ன?பதிவு செய்யாமலே, அல்லது பெயர் பதிவு இல்லாமல் சான்று பெறப்பட்டிருந்தால் யாருக்கு பெயர் பதிவு செய்யும் அதிகாரம் உண்டு, என்பது பற்றியான ஆலோசணைக் கூட்டம், துணை மண்டல வட்டாட்சியர் த.கண்ணன் அவர்கள் தலைமையில், பிறப்பு இறப்பு பதிவு அலுவலக பிரிவு அலுவலர் கு, ராமலிங்கம் அவர்கள் முன்னிலையிலும் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் சங்கத் தலைவர் G. பால்ராஜ் அவர்கள் உட்பட, அப்பிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.பாண்டியராஜன், பவுன்ராஜ், கருப்பையா,மொக்கை, கருப்பையா, புலி குத்தி, சங்கராபுரம், உ. அம்மாபட்டி, ஆகிய ஊராட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசணைக் கூட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிகள்படி பொது மக்களின் வீண் அலைச்சலைத் தவிர்க்கும் பொருட்டு தமிழக முதல்வர் அவர்களின் ஆய்வகக் கூட்ட செய்திப்படி தலைமையில் பொது சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசணைப்படி, சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1969ம் ஆண்டு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம், பிரிவு 13 மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000 ன் விதி எண் 9,ல் 30 நாட்களுக்குள் ஒருவருட காலத்திற்குள் பதிவு செய்யாமல் இருந்தால், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து சான்றுகள் பெறப்பட்டு வந்தது. இது பொதுமக்களுக்கு வீண் அலைச்சலைத் தருவதாக, உத்தமபாளையம் வட்டம், லட்சுமி நாயக்கன்பட்டி ,கோபால் என்பவரின் மனு மீதான நடவடிக்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது, அதன் படி அரசாணை 252 குடும்ப நலத்துறை AB- 2/18 -10-2016 அரசாணை எண் 415, /27 -09-2021 லிருந்து, அரசாணை எண்967 / 14-06-2022,இன்படி, செய்தி வெளியீடு செய்யப்பட்டது, ஊராட்சி மன்றத் தலைவர்களின் கடிதம் பெற்று சார் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆலோசணைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

VIDEOS

RELATED NEWS

Recommended