• முகப்பு
  • tamilnadu
  • சாவுக்கு சாலை ஆக்கிரமித்தால் என்ன செய்யலாம்?

சாவுக்கு சாலை ஆக்கிரமித்தால் என்ன செய்யலாம்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உன் வீட்டில் பிணம் விழுந்தால் ஊரெல்லாம் எழவு கொண்டாடனுமா? பிணம் விழுந்த வீட்டாளன் அந்தத் தெருவில் யாருமே நடமாட முடியாத அளவிற்கு குறுக்கே கொம்பு கட்டி அல்லது வாகனங்களை நிறுத்தி அல்லது கயிறுகட்டி ஒரு பிணத்திற்காக அந்த பகுதியே எழவு பகுதியாக மாற்றி கெத்து காட்டும் செத்து போன பிணத்தின் உரிமையாளன். இவர்கள் அறிவற்றவர்கள். சாவு வீடென்றால் எது செய்தாலும் கேட்க மாட்டார்கள் என்ற குடிகார மண போக்கு. மக்களோ நமக்கேன் வம்பு என வாய்மூடி சுற்றி செல்வர். முட்டு சந்தில் வாழ்பவனுக்கு அந்த பிணத்தை எடுக்கும் வரை நரகமே. வேலைக்கு, கடைகளுக்கு பால்வாங்க, மருத்துவ மனைக்கு, அட... பக்கத்து தெருவுக்கு கூட போக முடியாதுங்க. கழிப்பறை இல்லாத இடத்தில் ஒன்னுக்கையும் இரண்டுக்கையும் அடக்கி அவஸ்தை படுவது போல... பிணம் விழுந்த தெருவில் உள்ளவர்கள் கோமா நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இப்படியே போனால் எடப்பாடி ஆட்சியில் கொரானாவந்த வீட்டுக்கு வாயிற்காலில் தகரம் போட்டு மூடி ஆணி அடித்தது போல பிணம் விழுந்த வீட்டுக்காரன் அப்பகுதி வீடுகளுக்கு யாரும் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு தகரம் அடிக்க வாய்ப்புள்ளது. ஆளுங்கட்சி காரன் வீட்டில் பிணம் விழுந்தால் அவ்ளோதான் அந்த பகுதி மக்களே நடை பிணமாகத்தான் நட மாட வேண்டும். சரி.... இதற்கு தீர்வு தான் என்ன? அவசர போலிஸ் 100 க்கு கால் தான் செய்ய வேண்டும். ஆனால் ஒன்று.... வீடு கட்டும் பொருட்களை சாலையின் குறுக்கே கொட்டி வீடு கட்டுபவனிடம் மாமுல் பெற்று மகத்தான பணி செய்வது போல சாவு வீட்டில் செய்தால் இது போன்ற தொந்தரவுகளை தவிர்க்கலாம். செய்தியாளர் பா. கணேசன் (அனுபவஸ்தன்)

VIDEOS

RELATED NEWS

Recommended