உலக முதல் மொழியின் சிறப்புகளென்ன?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உலக முதல் மொழி தமிழின் பெருமை அறிவோமா.... ஒரு மொழி செம்மொழி தகுதிக்கான அடிப்படைப் பண்புகள் மொத்தம் பதினொன்று . அவை: 01. தொன்மை, 02. தனித் தன்மை, 03. பொதுமைப்பண்பு, 04. நடு நிலைமை, 05. தாய்மைப்பண்பு, 06. பண்பாட்டுக்கலை அறிவு மற்றும் பட்டறிவு வெளிப்பாடு. 07. பிறமொழித்தாக்கம் இல்லாப்பண்பு, 08. இலக்கியவளம், 09. உயர்சிந்தனை, 10.கலை இலக்கியத்தனித் தன்மை, 11.மொழிக்கோட்பாடு. இருப்பினும் நம் தமிழுக்குரிய பண்பு மொத்தம் பதினாறு. அவை: 1. தொன்மை, 2. முன்மை, 3. எண்மை, 4. ஒண்மை , 5. இளமை , 6. வளமை , 7. தாய்மை , 8. தூய்மை , 9. செம்மை, 10. மும்மை , 11. இனிமை, 12. தனிமை, 13. பெருமை , 14. திருமை , 15. இயன்மை , 16. வியன்மை . எனவே தான் தமிழ் சான்றோர்கள் மனதார வாழ்த்தும் பொழுது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என வாழ்த்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இவையனைத்தும் உள்ளடங்கிய ஒரே மொழி நம் தமிழ்மொழி....! வேறெந்த மொழிகளிலும் பதினாறும் பெரு வாழ்வு வாழ்க! என வாழ்த்துவது இல்லை. *அனுபவஸ்தன்*

VIDEOS

RELATED NEWS

Recommended