தன்னார்வலர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா.

மாரிமுத்து

UPDATED: May 23, 2023, 1:08:16 PM

உருவாக்குவோம் என்னும் உயரிய எண்ணத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி - தலைமைத்துவம் - பொருளாதார மேம்பாட்டு பணிகளை செய்துவரும் நீம் பவுண்டேசன் சார்பில் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

குழந்தைகளின் அறிவு மற்றும் திறமையின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து பல பயிற்சிகளை தொடர்ந்து நீம் பவுண்டேசன் நடத்தி வருகின்றது.

அதன்படி கடந்த பன்னிரண்டு நாட்களாக தன்னார்வலர்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் புனித லசால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது.

இப்பயிற்சியில் எழுத்தாற்றல், பேச்சாற்றல், மொழியாற்றல் உட்பட நாட்டுப்புற கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. 

சுயமாக கட்டுரை, சிறுகதை, கவிதை, துணுக்கு, பாடல் எழுதுவதற்கான பயிற்சி மற்றும் தன்னிலை அறிதல், தொடர்பியல் திறன், ஜோஹாரி சாளரம் உள்ளிட்ட உளவியல் திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் மகிழ்ச்சி, அழுகை, சோகம், கோபம், பணிவு, எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வீதி நாடகம் மற்றும் சமூக விழிப்புணர்வு பாடல்கள், ஒயிலாட்டம், கழியலாட்டம், கொண்டத்தாட்டம் பயிற்றுவிக்கப்பட்டது. 

பயிற்சியினை கோயம்புத்தூர் சேவை அசோசியேட்டின் செயல்பாட்டு உளவியலாளர் பெருமாள், லூர்துமேரி, கன்னியா குமரி பிரளயம் நிறுவனர் நன்மாறன், சிடோ நிறுவனர் சுதா ஆகியோர் நடத்தினர்.

இப்பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. 

விழாவில் நீம் பவுண்டேசன் கவுரவ ஆலோசகரும் ஊற்றுக் கண் பத்திரிகை ஆசிரியருமான எரோனிமுஸ், தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ், ஓட்டப்பிடாரம் வாட்டாரக் கல்வி அலுவலர் பவனந்திஸ்வரன், 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை இடை நிற்றல் மாணவர் திட்ட ஒருங்கிணைப்பாளர் கூட லிங்கம், லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர்கள் லயன் சகாய ராஜ், லயன் சுரேஷ் தங்க ராயப்பன், தொழிலதிபர் எம் ஆர் கே மோட்டார்ஸ் ஜெகதீஷ், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட பட்டியலினத்தார் ஆணைய செயலாளர் யூஜின், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் அனைவரையும் வரவேற்றார். 

நீம் பவுண்டேசன் நோக்கங்கள் குறித்து எரோனிமுஸ் அவர்களும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் தேவை குறித்து பயிற்சியாளர் பெருமாள் அவர்களும் விளக்கிப் பேசினார்கள்.

திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொகுப்பாக, சிற்பி என்னும் ஆவணப் புத்தகத்தினை சமூக நலத்துறை ஷெலின் ஜார்ஜ் வெளியிட வட்டாரக் கல்வி அலுவலர் பவனந்திஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற அனைவரும் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

நீம் ஒருங்கிணைப்பாளர் வேலம்மாள் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.

பயிற்சி மற்றும் விழா ஏற்பாடுகளை நீம் கல்விப் பணிகள் இயக்குநர் காட்சியா, குழந்தைகள் பாராளுமன்ற இயக்குநர் ரஞ்சித் பிரகாஷ், பொருளாதார மேம்பாட்டு பணிகள் இயக்குநர் அக்‌ஷரா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மணி ஐஸ்வர்யா, அபிநயா, வேலம்மாள், பெல்சிட்டா மற்றும் மாரித் தங்கம் சிறப்பாக செய்திருந்தனர்.

நீம் திட்ட இயக்குநர் நிமிஷா நன்றியுரை கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended