• முகப்பு
  • district
  • கிராம சபைக் கூட்டத்தில் அரசு அதிகாரியை செருப்பால் தாக்கிய ஊராட்சி மன்ற பெண் துணை தலைவர் ?

கிராம சபைக் கூட்டத்தில் அரசு அதிகாரியை செருப்பால் தாக்கிய ஊராட்சி மன்ற பெண் துணை தலைவர் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார் கோயில் கிராம சபைக் கூட்டத்தில் அரசு அதிகாரியை செருப்பால் தாக்கிய ஊராட்சி மன்ற துணை தலைவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் . கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிவகாசி கலியமூர்த்தி. இது தலித் தொகுதி என்பதால் தலித் பெண்மணி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார், மாற்று சமூகத்தை சேர்ந்த சரண்யா குமார் என்பவர் துணைத்தலைவராக உள்ளார். இவர் சுமார் ஒரு வருட காலமாக ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் ஏதாவது இடையூறு செய்து வருவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு பணி செய்ய முடியாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்பார்வையாளராக இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார் . கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பின்பக்கமாக வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரனை துணைத்தலைவர் சரண்யா குமார் தன் காலில் அணிந்திருந்த காலணியால் தாக்கியுள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் உடனே அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் , பின்னர் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் பல மணி நேரம் ஆகியும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் , பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முற்பட்டார்கள், நிலைமை வேறுவிதமாக மாறக்கூடும் என உணர்ந்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா குமாரை விசாரணைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரவாதம் கொடுத்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர் . இந்த சம்பவம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் பி.சண்முகம். இன்றைய செய்திகள் கடலூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,cudaloore flash news,cudaloore todays news tamil,cudaloore latest news,Grama sabha,Panchayat vice-chairperson assaults a government official at a village council meeting

VIDEOS

RELATED NEWS

Recommended