• முகப்பு
  • அரசியல்
  • வேலூர் ஆதிபராசக்தி, காளியம்மன் திருக்கல்யாண உற்சவத் திருவிழா கோலாகலம்! 

வேலூர் ஆதிபராசக்தி, காளியம்மன் திருக்கல்யாண உற்சவத் திருவிழா கோலாகலம்! 

வாசுதேவன்

UPDATED: May 26, 2023, 1:51:14 PM

வேலூர் மாவட்டம், விருதம்பட்டில் உள்ள ஆதிபராசக்தி, காளியம்மன் கோயில் பழமை வாய்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

மூன்று தினங்களும் ஊர்வலம் நடைபெறுவது வழக்கமாகும்.

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை (23-ம் தேதி) விடியற்காலை காளியம்மன் கோயிலில் ஆராதனை, சிறப்பு பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு அம்மன் வீதி உலா வந்தது. நண்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையடுத்து விடியற்காலை 2 மணியளவில் ஊர்வலம் புறப்பட்டு நகரில் முக்கிய வீதிகள் வழியாக வந்து விருதம்பட்டு கோயிலை மீண்டும் வந்தடைந்தது.

இரண்டாம் நாள் (மே 24) ஊர்வலமாக வந்த அம்மனுக்கு வழிநெடுகிலும் தாரை, தப்பட்டையுடன், கரகாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் இளைஞர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

ஐந்து வயது சிறுமியின் (எம்.ஆர். ஷாக்க்ஷிதா ) சிலம்பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த திருவிழா அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவீதி உலாவுடன் நடைபெற்றது. விருதம்பட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended