• முகப்பு
  • குற்றம்
  • கள்ளச்சாராயம் காய்ச்ச வெல்லத்தை பதுக்கிய இருவர் அதிரடி கைது!

கள்ளச்சாராயம் காய்ச்ச வெல்லத்தை பதுக்கிய இருவர் அதிரடி கைது!

வாசுதேவன்

UPDATED: May 27, 2023, 7:05:25 PM

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில், கள்ளச்சாராய தயாரிப்பு மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தலைமையிலான தனிப்படையினர் நேற்று (26.05.2023-ம் தேதி) அதிகாலை சுமார் 05:00 மணி அளவில் பேர்ணாம்பட்டு பஜார் ரோடு, எஸ்பிஐ ஏடிஎம் அருகிலுள்ள அனீஸ் த/பெ முகமது யாக்கூப், என்பவருக்கு சொந்தமான சிக்கன் கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கள்ளச்சாராய ஊரல்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் வெல்லம் 50 மூட்டைகள் (சுமார் 1500 கிலோ) பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்து அனீஸை கைது செய்தனர். அவர் மீது Cr.No.299/2023 u/s 4(1)g TNP ACT என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமாரின் தலைமையிலான போலீசார் பேர்ணாம்பட்டு பஜார் ரோட்டில் உள்ள பழனி த/பெ ராஜகோபால், என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கள்ளச்சாராய ஊரல்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் வெல்லம் 40 முட்டைகள் (சுமார் 1200 கிலோ) பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்து எதிரியை கைது செய்து அவர்மீது Cr.No.300/2023u/s4(1)g TNP ACT என்ற பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வெல்லம் மூட்டைகள் மொத்தம் 90 (சுமார் 2700 கிலோ) ஆகும். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,08,000/-. ஆகும். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended