• முகப்பு
  • district
  • கும்பகோணம் அருகே பாகவதபுரம் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக மூங்கில் பாலம் சேதம் 2பேர் கீழே விழுந்து காயம் பொதுமக்கள் போராட்டம்.

கும்பகோணம் அருகே பாகவதபுரம் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக மூங்கில் பாலம் சேதம் 2பேர் கீழே விழுந்து காயம் பொதுமக்கள் போராட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 14, 2023, 4:14:34 PM

கும்பகோணம் அருகே பாகவதபுரம் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக மூங்கில் பாலம் சேதம் பாலத்தில் வந்தவர்கள் இருவர் கீழே விழுந்து காயமடைந்தனர் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் பாகவதபுரத்திற்கும் திருபுவனத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட சிமென்ட் கான்கிரீட் பாலம் புதிதாக கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. அஸ்திவாரம் அமைத்து பில்லர் போடும் நிலையில் காவிரியில் தண்ணீர் வந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக கடந்த ஜூன் மாதம் மூங்கில் பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை வேப்பத்தூரை சேர்ந்த நடராஜன், கண்ணன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருபுவனம் சென்றனர். அப்போது மூங்கில் பாலத்தில் இருந்த பலகையின் கயிறு அவிழ்ந்து கீழே விழுந்தது. இதில் நடராஜன் கண்ணன் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். நான் வழியாக சென்றவர்கள் இருவரையும் தூக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாலம் கட்ட தாமதிக்கும் பொதுப்பணி துறையை கண்டித்தும், தாயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும் பொதுமக்கள் பூம்புகார் சாலையில் மாலை 5 மணி அளவில் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலயறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா மற்றும் காவல்துறையினர் மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் விரைவில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. பின்னர் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சேர்ந்து வட்டாட்சியரிடம் தற்போதைக்கு மூங்கில் பாலத்தை சரி செய்து புதிய பாலத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். கும்பகோணம் மாவட்ட செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended