இன்றைய ராசி பலன்கள் 28.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இன்றைய (28-05-2022) ராசி பலன்கள் மேஷம் மே 28, 2022 உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதிலிருந்த பலவிதமான குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பரணி : பிரச்சனைகள் குறையும். கிருத்திகை : சாதகமான நாள். ரிஷபம் மே 28, 2022 நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் கிருத்திகை : இழுபறிகள் நீங்கும். ரோகிணி : அபிவிருத்தியான நாள். மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். மிதுனம் மே 28, 2022 வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். சோர்வு குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : லாபகரமான நாள். திருவாதிரை : ஆதாயம் மேம்படும். புனர்பூசம் : மனவருத்தம் நீங்கும். கடகம் மே 28, 2022 வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் புனர்பூசம் : மந்தத்தன்மை குறையும். பூசம் : எண்ணங்கள் கைகூடும். ஆயில்யம் : முன்னேற்றமான நாள். சிம்மம் மே 28, 2022 புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மகம் : ஆதரவு கிடைக்கும். பூரம் : சிந்தித்து செயல்படவும். உத்திரம் : சிந்தனைகள் மேம்படும். கன்னி மே 28, 2022 மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு உத்திரம் : காலதாமதமான நாள். அஸ்தம் : அனுசரித்து செல்லவும். சித்திரை : கவனம் வேண்டும். துலாம் மே 28, 2022 வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும். விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும். விருச்சிகம் மே 28, 2022 கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பரிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும். அனுஷம் : காரியசித்தி உண்டாகும். கேட்டை : வெற்றிகரமான நாள். தனுசு மே 28, 2022 மாணவர்களுக்கு ஞாபகசக்தி மேம்படும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் மூலம் : ஆதரவான நாள். பூராடம் : சேமிப்பு குறையும். உத்திராடம் : உதவி கிடைக்கும். மகரம் மே 28, 2022 குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும். திருவோணம் : குழப்பம் உண்டாகும். அவிட்டம் : முன்னேற்றமான நாள். கும்பம் மே 28, 2022 வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வருவாய் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : மாற்றம் ஏற்படும். சதயம் : இழுபறிகள் குறையும். பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். மீனம் மே 28, 2022 எதிர்பார்த்த தனவரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிறுதொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். மறதிகள் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் பூரட்டாதி : செலவு உண்டாகும். உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும். ரேவதி : தன்னம்பிக்கையான நாள்.

VIDEOS

RELATED NEWS

Recommended