இன்றைய ராசி பலன்கள் 13.6.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இன்றைய (13-06-2022) ராசி பலன்கள் மேஷம் ஜூன் 13, 2022 சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் சேமிப்பு குறையும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. வர்த்தக பணிகளில் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் அஸ்வினி : அனுசரித்து செல்லவும். பரணி : வரவு கிடைக்கும். கிருத்திகை : வருத்தங்கள் ஏற்படும். ரிஷபம் ஜூன் 13, 2022 வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். விவாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடம்பர சிந்தனைகளின் மூலம் குழப்பமும், தெளிவின்மையும் ஏற்படும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் கிருத்திகை : பயணங்கள் கைகூடும். ரோகிணி : விருப்பம் நிறைவேறும். மிருகசீரிஷம் : குழப்பமான நாள். மிதுனம் ஜூன் 13, 2022 மனதில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கவலைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள். திருவாதிரை : அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் : முடிவு கிடைக்கும். கடகம் ஜூன் 13, 2022 மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் ஆராய்ந்து முடிவு எடுக்கவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் புனர்பூசம் : எதிர்ப்புகளை அறிவீர்கள். பூசம் : நம்பிக்கை ஏற்படும். ஆயில்யம் : மாற்றம் பிறக்கும். சிம்மம் ஜூன் 13, 2022 விவசாய பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மனம் திறந்து கருத்துக்களை பகிர்வதன் மூலம் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். நுணுக்கமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மகம் : முன்னேற்றம் ஏற்படும். பூரம் : தெளிவு பிறக்கும். உத்திரம் : புரிதல் உண்டாகும். கன்னி ஜூன் 13, 2022 உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த சில இடமாற்றம் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு உத்திரம் : மகிழ்ச்சியான நாள். அஸ்தம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சித்திரை : திருப்திகரமான நாள். துலாம் ஜூன் 13, 2022 சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பின் மூலம் புதிய நம்பிக்கை பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் உற்சாகமும், அனுபவமும் அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் சித்திரை : சாதகமான நாள். சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். விசாகம் : உற்சாகம் அதிகரிக்கும். விருச்சிகம் ஜூன் 13, 2022 மாறுபட்ட முயற்சிகளின் மூலம் எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் விசாகம் : முயற்சிகள் மேம்படும். அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும். தனுசு ஜூன் 13, 2022 வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். தடைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூராடம் : சிந்தித்து செயல்படவும். உத்திராடம் : பயணங்கள் செல்வீர்கள். மகரம் ஜூன் 13, 2022 பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தாமதம் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திராடம் : முன்னேற்றமான நாள். திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும். அவிட்டம் : மேன்மையான நாள். கும்பம் ஜூன் 13, 2022 தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் அவிட்டம் : வரவு கிடைக்கும். சதயம் : சிந்தனைகள் மேம்படும். பூரட்டாதி : உதவி கிடைக்கும். மீனம் ஜூன் 13, 2022 மருத்துவம் சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த சில விஷயங்கள் கைகூடும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும். உத்திரட்டாதி : பயணங்கள் சாதகமாகும். ரேவதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

VIDEOS

RELATED NEWS

Recommended