இன்றைய முக்கிய செய்திகள் 27.4.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விருதுநகர் : நெல்லிக்குளம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் : அருகே கேட்பாரற்று நின்றிருந்த டேங்கர் லாரியில் 4,000 லிட்டர் கலப்பட டீசல் சிக்கியது. வள்ளிபுரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மினி டேங்கர் லாரியில் கலப்பட டீசல் இருக்கலாம் என ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்தார். நாமக்கல் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்று ஆய்வு செய்தபோது கலப்பட டீசல் சிக்கியது. மினி லாரி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி : மருத்துவக் கல்லூரி பகுதியில் போலீஸ் சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.62,000 மதிப்புள்ள குட்கா சிக்கியது. குட்கா வைத்திருந்ததாக கல்லூரணி சாலை ஜெயராம் (28), முக்கூடலைச் சேர்ந்த ராஜ் (55), கடையம் பாஸ்கர் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது. செங்கல்பட்டு : செங்கல்பட்டு - திருவாஞ்சேரியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.13,000 லஞ்சம் வாங்கியதாக விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது செய்யபட்டார். பட்டா மாற்றத்திற்கு ரூ.13,000 லஞ்சம் பெற்றதாக விஏஓ தீபா, உதவியாளர் தனலட்சுமியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் கைது செய்தனர். சென்னை : கோயம்பேடு மார்கெட்டில் ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்கள், 900 கிலோ அவக்கோடா பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். கோவை : பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அருகே கோழிகமுத்தி யானைகள் முகாமில் 71 வயதான பெண் யானை விஜயலட்சுமி கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை இன்று பிற்பகல் உயிரிழப்பு. திருவண்ணாமலை : செங்கம் அரசு பள்ளியில் ராகிங் அட்டகாசம் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட். கடலூர்: விருத்தாசலம் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு. புதுக்கோட்டை : அருகே முன்விரோதத்தில் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு,வாலிபர் கைது. திண்டுக்கல் : அனுமதியின்றி நடத்திய மசாஜ் சென்டருக்கு ‘சீல்’: கொடைக்கானலில் பரபரப்பு. இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news,Trichy news,nilgiri news,salem news,tuticorin news,dindigul news,Thirupur news,pudukottai news,cudaloore news,coimbatore news today,chengalpet news today tamil

VIDEOS

RELATED NEWS

Recommended