இன்றைய முக்கிய செய்திகள் 26.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திண்டுக்கல் : பட்டிவீரன்ட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் இன்று சித்தரேவு மதுபான கடையில் மதுபான பாட்டிலை வாங்கி, உடைப்பதற்காக குலுக்கிய போது ஏதோ உட்புறம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் இறந்த நிலையில் குட்டித் தவளை ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. இதுகுறித்து, கடை விற்பனையாளரிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை. இச்சம்பவம் மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை : நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சகாய இனிதா கூடங்குளத்தில் அணு கழிவு மையம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார். திருச்சி : மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் இன்று மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. ஸ்ரீ ரங்கத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வாகன நுழைவுக்கட்டணம் ரத்து செய்யப்படும் என மேயர் மு.அன்பழகன் அறிவித்துள்ளார். திருப்பத்தூர் : நாட்றம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து ஒன்பது ஆடுகள் உயிரிழந்தது. இதைதொடர்ந்து மர்ம விலங்கை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் : மத்திய கூட்டுறவு வங்கியின் 44-வது கிளை புதுப்பேட்டையில் திறக்கப்பட்டது. வேலூர் : வழியாக ஆந்ராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க இரண்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் திரு குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை : வருவாய் தீர்வாயம் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். நாமக்கல் : ஆண்டுக்கான வருவாய் தீர்வாயத்தின் இரண்டாம் நாளான இன்று பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் திருமதி ஸ்ரேயா பி சிங் வழங்கினார். அரியலூர் : தாட்கோ அலுவலகம் சார்பில் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பயனாளிகளுக்கு வழங்கினார். சென்னை : பிரதமர் வருகை காரணமாக இன்று சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பலரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியதால் மெட்ரோ நிலையங்களில் அலைமோதியது கூட்டம்.

VIDEOS

RELATED NEWS

Recommended