இன்றைய முக்கிய செய்திகள் 2.6.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

1. கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்தியரசின் இ - சந்தையில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. 2. இ - சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப் படையாக உரிய விலையில் விற்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 3. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ் நாடு மின்சார வாரிய செயற் பொறியாளருக்கு திருவள்ளூர் நகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். 4. திருவள்ளூரில் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடைவரி சுமார் ரூபாய் 6.38 கோடி நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். 5. இந்தியாவிலேயே அதிகமாக கோயில்கள் ( 79,154 ) கொண்ட மாநிலங்களில் தமிழ் நாடு முதலிடம் மும்பை ஐஐடி ஆய்வில் தகவல். 6. சென்னை அண்ணா நகர் டவர்பார்க் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், கரையை பலப் படுத்த கோரிய வழக்கில் தமிழகரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு. தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம். 7. தமிழக பாரதியஜனதா கட்சி மாநில உரிமைகளுக்காக போராடவில்லையென்பது நாடறிந்த உண்மை . பாஜக நட்பு கட்சி தான்; கூட்டணி என்பதுவேறு; கொள்கை என்பதுவேறு தமிழகத்தில் இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது அதிமுகவின் பொன்னையன். செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended