இன்றைய (18-06-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 18, 2022 உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் அஸ்வினி : அனுகூலம் உண்டாகும். பரணி : உயர்வான நாள். கிருத்திகை : அனுபவம் கிடைக்கும். ரிஷபம் ஜூன் 18, 2022 உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். திருப்திகரமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கிருத்திகை : அனுசரித்து செல்லவும். ரோகிணி : ஆர்வம் மேம்படும். மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும். மிதுனம் ஜூன் 18, 2022 தொழில் நிமிர்த்தமான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். காலம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத கோபத்தினை குறைத்து கொள்வது நல்லது. மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடனான சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். திருவாதிரை : கோபத்தை குறைக்கவும். புனர்பூசம் : மாற்றமான நாள். கடகம் ஜூன் 18, 2022 வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். உலகியல் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். விரயங்கள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை புனர்பூசம் : லாபகரமான நாள். பூசம் : சிந்தனைகள் மேம்படும். ஆயில்யம் : உதவி கிடைக்கும். சிம்மம் ஜூன் 18, 2022 உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் செயல்படவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். நட்பு அதிகரிக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் மகம் : பொறுப்புகள் மேம்படும். பூரம் : நிதானத்துடன் செயல்படவும். உத்திரம் : ஆதரவு கிடைக்கும். கன்னி ஜூன் 18, 2022 உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உடன்பிறப்புகளிடத்தில் அனுசரித்து செல்லவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் உத்திரம் : மகிழ்ச்சியான நாள். அஸ்தம் : அனுசரித்து செல்லவும். சித்திரை : திறமைகள் வெளிப்படும். துலாம் ஜூன் 18, 2022 அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் சித்திரை : உதவி கிடைக்கும். சுவாதி : மந்தத்தன்மை குறையும். விசாகம் : தீர்வு கிடைக்கும். விருச்சிகம் ஜூன் 18, 2022 உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். அலைச்சல்கள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும். அனுஷம் : சாதகமான நாள். கேட்டை : பயணங்கள் செல்வீர்கள். தனுசு ஜூன் 18, 2022 வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு முதலீடுகள் மேம்படும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், ஈர்ப்பும் மேம்படும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் மூலம் : மகிழ்ச்சியான நாள். பூராடம் : அறிமுகம் கிடைக்கும். உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். மகரம் ஜூன் 18, 2022 புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துயரங்கள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும். திருவோணம் : புரிதல் உண்டாகும். அவிட்டம் : விருப்பம் நிறைவேறும். கும்பம் ஜூன் 18, 2022 குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அவிட்டம் : ஒற்றுமை உண்டாகும். சதயம் : சாதகமான நாள். பூரட்டாதி : புரிதல் ஏற்படும். மீனம் ஜூன் 18, 2022 தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் பூரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும். உத்திரட்டாதி : லாபகரமான நாள். ரேவதி : மகிழ்ச்சி ஏற்படும்.

VIDEOS

RELATED NEWS

Recommended