இன்றைய (15-06-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 15, 2022 வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். நிர்வாகம் தொடர்பான உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சில நுட்பமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : ஒத்துழைப்பு மேம்படும். பரணி : அறிமுகம் கிடைக்கும். கிருத்திகை : தேடல் அதிகரிக்கும். ரிஷபம் ஜூன் 15, 2022 பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மறதி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : நெருக்கடியான நாள். ரோகிணி : சிந்தித்து செயல்படவும். மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும். மிதுனம் ஜூன் 15, 2022 மனதில் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் ஏற்படும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். புனர்பூசம் : மேன்மையான நாள். கடகம் ஜூன் 15, 2022 கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாக அமையும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும். பூசம் : சிந்தனைகள் மேம்படும். ஆயில்யம் : உதவி கிடைக்கும். சிம்மம் ஜூன் 15, 2022 பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மறைமுகமான ஆதரவு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் மகம் : மேன்மையான நாள். பூரம் : மாற்றம் ஏற்படும். உத்திரம் : முன்னேற்றமான நாள். கன்னி ஜூன் 15, 2022 உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : உதவி கிடைக்கும். அஸ்தம் : தன்னம்பிக்கை ஏற்படும். சித்திரை : லாபம் அதிகரிக்கும். துலாம் ஜூன் 15, 2022 எந்தவொரு பணியையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் பொறுமை வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் கைகூடும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும் சுவாதி : அனுசரித்து செல்லவும். விசாகம் : எண்ணங்கள் ஈடேறும். விருச்சிகம் ஜூன் 15, 2022 குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் விசாகம் : பயணங்கள் சாதகமாகும். அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும். கேட்டை : மாற்றமான நாள். தனுசு ஜூன் 15, 2022 இணையம் சார்ந்த துறைகளில் வரவு மேம்படும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன்பிறந்தவர்களின் வழியில் தொழில் சார்ந்த ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு மூலம் : வரவு மேம்படும். பூராடம் : ஆதாயம் கிடைக்கும். உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும். மகரம் ஜூன் 15, 2022 வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் மேம்படும். தந்தைவழி உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீடு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் இருக்கும் ரகசியங்களில் கவனம் வேண்டும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் உத்திராடம் : முதலீடுகள் மேம்படும். திருவோணம் : முன்னேற்றமான நாள். அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். கும்பம் ஜூன் 15, 2022 உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும். சதயம் : சாதகமான நாள். பூரட்டாதி : இன்னல்கள் குறையும் மீனம் ஜூன் 15, 2022 கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தனைகள் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் பூரட்டாதி : கவனம் வேண்டும். உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும். ரேவதி : மாற்றம் ஏற்படும்.

VIDEOS

RELATED NEWS

Recommended