இன்றைய (03-07-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூலை 03, 2022 உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவியின் மூலம் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். உங்களின் மீதான நம்பிக்கை வெளிவட்டாரங்களில் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அஸ்வினி : திறமைகள் வெளிப்படும். பரணி : மேன்மை ஏற்படும். கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும். --------------------------------------- ரிஷபம் ஜூலை 03, 2022 உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்களும், அதற்குண்டான உதவிகளும் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். கவலைகள் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும். ரோகிணி : ஆர்வம் உண்டாகும். மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும். --------------------------------------- L மிதுனம் ஜூலை 03, 2022 பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். கனிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும். திருவாதிரை : பிரச்சனைகள் குறையும். புனர்பூசம் : மந்தமான நாள். --------------------------------------- கடகம் ஜூலை 03, 2022 நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் புனர்பூசம் : மேன்மையான நாள். பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும். ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும். --------------------------------------- சிம்மம் ஜூலை 03, 2022 புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பதற்றமில்லாமல் செயல்பட்டு எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மகம் : சிந்தனைகள் மேம்படும். பூரம் : வெற்றிகரமான நாள். உத்திரம் : புரிதல் உண்டாகும். --------------------------------------- கன்னி ஜூலை 03, 2022 எதிர்பார்த்த தனவரவு காலதாமதமாக கிடைக்கும். ரகசியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். பரிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திரம் : காலதாமதமான நாள். அஸ்தம் : விழிப்புணர்வுடன் செயல்படவும். சித்திரை : மாற்றம் ஏற்படும். --------------------------------------- துலாம் ஜூலை 03, 2022 ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் சித்திரை : இன்னல்கள் குறையும். சுவாதி : தீர்வு உண்டாகும். விசாகம் : மாற்றம் ஏற்படும். --------------------------------------- விருச்சிகம் ஜூலை 03, 2022 உடனிருப்பவர்களை பற்றியும், உலகியல் வாழ்க்கை பற்றியும் புரிதல் உண்டாகும். ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு விசாகம் : புரிதல் உண்டாகும். அனுஷம் : முன்னேற்றமான நாள். கேட்டை : ஈடுபாடு உண்டாகும். --------------------------------------- தனுசு ஜூலை 03, 2022 உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதலும், தெளிவும் ஏற்படும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆலோசனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும். பூராடம் : தன்னம்பிக்கை மேம்படும். உத்திராடம் : தெளிவு பிறக்கும். --------------------------------------- மகரம் ஜூலை 03, 2022 குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அரசு சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படுவதால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும். திருவோணம் : கவனம் வேண்டும். அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும். --------------------------------------- கும்பம் ஜூலை 03, 2022 நட்பு வட்டம் விரிவடையும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சில உதவி சாதகமாக அமையும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : ஆதாயகரமான நாள். சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும். --------------------------------------- மீனம் ஜூலை 03, 2022 உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நுட்பமான சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் பூரட்டாதி : மேன்மை உண்டாகும். உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். ரேவதி : விருப்பம் நிறைவேறும். ---------------------------------------

VIDEOS

RELATED NEWS

Recommended