இன்றைய (02-07-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூலை 02, 2022 புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தை செய்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும். பரணி : கவனம் வேண்டும். கிருத்திகை : முடிவு கிடைக்கும். --------------------------------------- ரிஷபம் ஜூலை 02, 2022 மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் கிருத்திகை : பாராட்டுகளை பெறுவீர்கள். ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும். மிருகசீரிஷம் : சாதகமான நாள். --------------------------------------- மிதுனம் ஜூலை 02, 2022 ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை உருவாக்கும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். திருவாதிரை : சஞ்சலமான நாள். புனர்பூசம் : நம்பிக்கை பிறக்கும். --------------------------------------- கடகம் ஜூலை 02, 2022 எண்ணிய சில பணிகளை செய்வதில் காலதாமதம் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். முயற்சிகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும். பூசம் : அனுசரித்து செல்லவும். ஆயில்யம் : பிரச்சனைகள் நீங்கும். --------------------------------------- சிம்மம் ஜூலை 02, 2022 உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான விரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : விரயங்கள் உண்டாகும். பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். உத்திரம் : எதிர்ப்புகள் அதிகரிக்கும். --------------------------------------- கன்னி ஜூலை 02, 2022 வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் மற்றும் உழைப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். திருப்திகரமான நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திரம் : மாற்றம் உண்டாகும். அஸ்தம் : உழைப்பு அதிகரிக்கும். சித்திரை : அனுகூலமான நாள். --------------------------------------- துலாம் ஜூலை 02, 2022 தனவரவு தேவைக்கு ஏற்ப அமையும். ஆரோக்கியம் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் எதிர்ப்புகளை குறைக்க இயலும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் சித்திரை : பிரச்சனைகள் குறையும். சுவாதி : மந்தமான நாள். விசாகம் : புரிதல் உண்டாகும். --------------------------------------- விருச்சிகம் ஜூலை 02, 2022 சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பும், நெருக்கமும் ஏற்படும். நிதானமான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும். அனுஷம் : மதிப்பு அதிகரிக்கும். கேட்டை : முயற்சிகள் கைகூடும். --------------------------------------- தனுசு ஜூலை 02, 2022 மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் எதிராக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு மூலம் : விவாதங்களை தவிர்க்கவும். பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்திராடம் : காலதாமதமான நாள். --------------------------------------- மகரம் ஜூலை 02, 2022 மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை சார்ந்த வியாபார பணிகளில் லாபம் ஏற்படும். வங்கி சார்ந்த கடன் உதவி சாதகமாக அமையும். செல்வாக்கு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் உத்திராடம் : புத்துணர்ச்சி ஏற்படும். திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும். அவிட்டம் : சாதகமான நாள். --------------------------------------- கும்பம் ஜூலை 02, 2022 குழந்தைகளின் வழியில் சுபவிரயங்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். இனம்புரியாத கற்பனை சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு அவிட்டம் : விரயங்கள் ஏற்படும். சதயம் : குழப்பமான நாள். பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும். --------------------------------------- மீனம் ஜூலை 02, 2022 உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்கள் சார்ந்த விஷயங்கள் கைகூடும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மதிப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும். உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள். ரேவதி : சிந்தனைகள் மேம்படும். ---------------------------------------

VIDEOS

RELATED NEWS

Recommended