• முகப்பு
  • district
  • அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் முப்பரிமாண செஸ் ஓவியம்.

அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் முப்பரிமாண செஸ் ஓவியம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. உலக அளவில் நடைபெறக்கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடப்பது இதுவே முதன்முறை. 188 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் அளவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் நமது தமிழ்நாட்டில் தமிழக அரசின் ஏற்பாட்டில் நடத்தப்படுவது நாம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய மகிழ்ச்சியான செய்தியாகும். இத்தகு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தவைவர் ப.ஶ்ரீ.வெங்கடபிரியா,இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, நமது பெரம்பலூர் மாவட்டத்தில் புது முயற்சியாக அரசுப் பள்ளிகளில் பணியாற்ற கூடிய திறமை வாய்ந்த ஓவிய ஆசிரியர்கள் தன்னார்வமாக வருகை தந்து தங்களின் ஓவியத் திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. தமிழக அளவில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு வரையப்பட்டு வரும் இந்த விழிப்புணர்வு ஓவியங்கள் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நவீன வர்ணங்களை பயன்படுத்தி முப்பரிமாண சதுரங்கம் கட்டங்களில் நாணயங்கள் இருப்பது போன்று அமோனைட்ஸ் மையத்தில் இந்த ஓவியங்கள் அற்புதமாக வரையப்பட்டு வருகிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த ஓவியங்களை வரையும் பணியில் பாடாலூர் பள்ளி ஓவிய ஆசிரியர்கள் 15.07.2022 முதல் பணிகளை தொடங்கி இந்த முப்பரிமாண ஓவியத்தினை வரைந்து வருகிறார்கள். ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிவுற்று பொதுமக்களின் பார்வைக்கு விடப்படும். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்

VIDEOS

RELATED NEWS

Recommended