• முகப்பு
  • crime
  • தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் மற்றும் அதிகாரிகளை கைது செய்து ஆஜர்படுத்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் மற்றும் அதிகாரிகளை கைது செய்து ஆஜர்படுத்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர்  நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது அசல் ஆவணத்தை வைத்து கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை அவர் முழுமையாக வட்டியுடன் செலுத்திய பின்னரும், அவருக்கு அசல் ஆவணத்தை திருப்பி வழங்காமல் வீட்டுவசதி வாரிய நிர்வாகம் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஸ்ரீநிவாசன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் மனுதாரருக்கு சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிவாசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை செலவு மற்றும்  பின் வட்டியுடன் செலுத்த வேண்டும் மேலும் அவருடைய அசல் ஆவணத்தை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை அதிகாரிகள் செயல்படுத்தாத காரணத்தினால் சீனிவாசன் மீண்டும் நிறைவேற்று மனு ஒன்றை மாவட்டக் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பில் சென்னை தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி ஆணைய மேலாண்மை இயக்குனர், தஞ்சாவூர் வீட்டுவசதி மண்டல துணை பதிவாளர், நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்க செயலாளர் ஆகிய 3 பேரையும் கைது செய்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாயிலாக நன்னிலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur District Consumer Complaints Commission orders arrest and production of Tamil Nadu Co-operative Housing Board Managing Director and official

VIDEOS

RELATED NEWS

Recommended